
மகாத்மா காந்தியின் 140 பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய பிறந்த நாளை அகிம்சை நாளாக சர்வதேச அளவில் கடைபிடித்து வரும் ஐ.நா., அவருடைய உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது.
அமெரிக்காவின் மியாமியைச் சேர்ந்த உலகின் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவரான ஃபெர்டி பச்சிகோ, மகாத்மா காந்தியின் திருவுருவத்தை சிகப்பு, நீலம், தங்க வண்ணங்களில் வரைந்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நேற்று நடந்த மகாத்மா காந்தி பிறந்த நாள் விழாவில் பேசிய ஐ.நா.விற்கான இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் பூரி, �ஐ.நா. அவையை நுண்ணோக்கால் அறிந்தவர் மகாத்மா காந்தி. தென் ஆப்ரிக்காவில் இனவெறி அரசுக்கு எதிராக மகாத்மா நடத்திய போராட்டமே ஐ.நா.வின் இன்றைய மனித உரிமை பிரகடனமாக உள்ளது� என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக