சவுதி தமிழ்ச் சங்க தலைவரான அப்துல் மாலிக் சனிக்கிழமை ஜெத்தாவில் மாரடைப்பினால் காலமானார்.
அவர் தனது குடும்பத்துடன் ஜெத்தாவில் வசித்து வந்தார்.
தஞ்சை மாவட்டம் ராஜகிரியைச் சேர்ந்த மாலிக் 25 வருடங்களாக சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்தார்.
முதுநிலைக் கல்வி கற்ற இவர் ஜித்தா சர்வதேச இந்தியப் பள்ளியின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் ஆவார். சவுதி இந்தியத் தூதரகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளின் கல்விக்குழுவிலும் அங்கம் வகித்தார்.
இந்திய புனிதப் பயணிகள் நலச்சங்கத்தை ஏற்படுத்தி முதல் ஐந்து ஆண்டுகள் அதன் தலைவராக இருந்து ஹஜ் பயணிகளின் குறைகளை போக்க முயற்சிகள் மேற்கொண்டவர்.
ஜித்தா தமிழ்ச் சங்கத்தை துவக்கி அதன் தலைவராக 12 ஆண்டுகள் இருந்தவர். சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து சவுதி தமிழ்ச் சங்கம் ஏற்படுத்த காரணமாக இருந்தவர். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி, உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர். மேலும் பல்வேறு விருதுகளையும் பெற்றவர் ஆவார்.
எழுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர். திரை விலகப்போகுது, புயல்கள் ஓயவதில்லை, விடைக்கேற்ற வில்லை ஆகிய மூன்று தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார்.
அவரது சிறுகதைகள் பல்கலை மற்றும் கல்லூரி மாணவர்களால் ஆய்வு செய்யப்பட்டு எம்.ஃபில் மற்றும் பி.எச்.டி பட்டங்களைப் பெற்றுள்ளனர்.
அவரது மறைவுக்கு துபாய் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, ரியாத் தமிழ்ச் சங்க செயலாலர் அப்பாஸ் ஷாஜஹான்,அமீரக காயிதெமில்லத் பேரவை செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி ஜாபர் சித்தீக்,
இனிய திசைகள் ஆசிரியர் சேமுமு. முஹம்மதலி, இந்திய யூனியன் முஸ்லிம் பொதுச்செயலாளார் காயல் அபுபக்கர், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் பல்வேறு ஜமாஅத்தார்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் தங்களது இரங்கல் தெர்வித்துள்ளனர்.
மேலும் வளைகுடா தமிழ் அமைப்புகளும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக