சனி, 3 அக்டோபர், 2009

லஞ்சத்தை தவிர்க்க, 32 கேமராக்கள்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை நிகழ்வுகள் மற் றும் லஞ்சத்தை தவிர்க்க, 32 கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் முறை, தமிழகத்தில் முதன்முறையாக நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இங்கு 2,266 உள்நோயாளிகளும், 8,000 புறநோயாளிகளும் தினமும் சிகிச்சை பெறுகின்றனர். 2,200 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். சிலர் பணிக்கு வந்ததும் கையெழுத்து போட்டுவிட்டு மருத்துவமனையை விட்டு வெளியேறி விடுகின்றனர். சில ஊழியர்கள் லஞ்சம் வாங்கவே பணிபுரிகின்றனர். சமீபத்தில், லஞ்சஒழிப்பு போலீசாரிடம் சில ஊழியர்கள் பிடிபட்டனர். இதை கட்டுப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. முதற்கட்டமாக, பணி நேரத்தில் ஊழியர்கள் மருத்துவமனையில் இருக்கும் வகையில், 80 ஆயிரம் ரூபாய் செலவில் நான்கு தானியங்கி விரல் ரேகைப் பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட்டன.

நேற்று முதல் அலுவலக பணியாளர்கள் விரல் பதிவு செய்கின்றனர். மருத்துவமனையில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், ஊழியர்களை கண்காணிக்கவும், 4.20 லட்சம் ரூபாயில் டீன் அறை பகுதி, மகப்பேறு, வெளிநோயாளிகள் பிரிவு, பிரேத அறை, அவசர சிகிச்சைப் பிரிவு, ஏ.ஆர்.டி., சென்டர், கைதிகள் வார்டு, ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்கும் பகுதிகள் உட்பட 32 இடங்களில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இப்பணியை, மதுரை பினீக்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் செய்து கொடுத்துள்ளது.

உரிமையாளர் மாரியப்பன் கூறுகையில், ""காலை 8 முதல் இரவு 7 மணி வரை பதிவு செய்யப்படும். டீன் சிவக்குமார் தனது அறையிலிருந்தும், வீட்டில் இருந்தும் கண்காணிக்க முடியும். சமீபத்தில் வெள்ளோட்டம் பார்த்த போது, லஞ்சம் வாங்கிய ஊழியர் மற்றும் சமையல் கூடத்தில் முட்டைகளை சாப்பிட்ட ஊழியர் பிடிபட்டனர். விரைவில், சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், செயலர் சுப்புராஜ் ஆகியோர் தங்கள் அறையிலிருந்து இன்டர்நெட் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
இது ஒரு இ மெயில் நியூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin