வெள்ளி, 11 செப்டம்பர், 2009

அரசு பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் லேப் தூத்துக்குடி கலெக்டர் பிரகாஷ் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அதிக தேர்ச்சி சதவீதம் பெறும் 10 பள்ளிகளை தேர்வு செய்து அந்த பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் குளிர்சாதன வசதியுடன் நவீன கம்ப்யூட்டர் லேப் அமைத்து கொடுக்கப்படும் என்று கலெக்டர் பிரகாஷ் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வித்துறை செயல்பாடுகள் எந்த அளவிற்கு இருக்கிறது. நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதம் எந்த அளவிற்கு இருக்கும் என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகளின் ஆய்வு கூட்டம் நேற்று மாலை கலெக்டர் ஆபிசில் கலெக்டர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. முதன்மை கல்வி அதிகாரி பிறைட்சேவியர், அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட அதிகாரி அமிர்தராஜ்ஜெயகரன், மாவட்ட கல்வி அதிகாரிகள், தொடக்க கல்வி அதிகாரி ஜெயராமன் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் இந்த ஆண்டு அரசு பொது தேர்வில் மாநில அளவில் ரேங்க் பெறுவதற்கும், தேர்ச்சி சதவீதத்தில் முதல் இடத்தை பெறுவதற்கும் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது குறித்து கல்வி அதிகாரிகளிடம் கலெக்டர் ஆலோசனை மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 90 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெறும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் 10 பள்ளிகளை தேர்வு செய்து அந்த பள்ளிகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய கம்ப்யூட்டர் லேப் குளிர்சாதன வசதிகளுடன் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும் இதே போல் இம் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இயற்பியல், வேதியியல் போன்ற அறிவியல் ஆய்வுகூடங்களை நல்ல முறையில் பராமரித்து தரமாக வைத்திருக்கும் 25 பள்ளிகளை தேர்வு செய்து அந்த பள்ளிகளுக்கு பரிசு வழங்கப்படும் மாவட்டம் முழுவதும் ஆய்வுக்கு செல்லும் போது பள்ளிகளை விசிட் செய்து ஆய்வுக் கூடங்களுக்கு சென்று பார்த்து பரிசுக்குரிய பள்ளியை தேர்வு செய்வேன் என்றும் கலெக்டர் பிரகாஷ் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin