வெள்ளி, 11 செப்டம்பர், 2009

வெளிநாடு சென்ற தொழிலாளர்களின் அதிக வருவாயைப் பெறுவது இந்தியா

வெளிநாடு சென்று வேலைபார்க்கும் தொழிலாளர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கும் பணத்தின் அளவை வைத்துப் பார்க்கையில் உலகில் முதலிடம் வகிக்கும் நாடு இந்தியா தான் என்று அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன.

கடந்த ஓர் ஆண்டில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் பிரஜைகளிடம் இருந்து இந்தியா 4500 கோடி அமெரிக்க டாலர்களைப் பெற்றுள்ளதாம்.

இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் சீனாவும் அதைத் தொடர்ந்து மெக்ஸிகோவும் இந்தப் பட்டியலில் இருக்கின்றன.

தவிர உலக பொருளாதார நெருக்கடி வேலைக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கையை பெரிய அளவில் பாதித்துள்ளது என்பதையும் பிபிசி நடத்திய ஓர் சுற்றாய்வு கோடிட்டுக் காட்டியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin