சனி, 12 செப்டம்பர், 2009

தாடி வளர்த்ததால் நீக்கப்பட்டமுஸ்லிம் மாணவரை மீண்டும் சேர்க்க வேண்டும்

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள `நிர்மல் கான்வெண்ட்' பள்ளியில் 10-ம் வகுப்பில் படித்த மாணவர், முகமது சலீம். அவர் தாடி வளர்த்ததால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் பி.என்.அகர்வால், ஜி.எஸ்.சிங்வி ஆகியோரைக் கொண்ட `பெஞ்ச்' முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், தாடி வளர்த்ததற்காக பள்ளியில் இருந்து முஸ்லிம் மாணவரை நீக்குவது என்றால், சீக்கிய மாணவர் தாடி வளர்த்தாலும் நீக்கப்படுவாரா? வருங்காலத்தில் சிவப்பான நிறத்தின் அடிப்படையில் கூட ஒரு மாணவரை நீக்கும் நிலை வருமா? என்பது போன்ற கேள்விகளை எழுப்பினார்கள்.

மாணவர் முகமது சலீமை மீண்டும் சேர்த்துக்கொள்ளும்படி பள்ளிக்கூட நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மாணவரின் மனு குறித்து பதில் அனுப்பவும் நோட்டீசு அனுப்பினார்கள்.

சர்ச்சைக்குரிய இந்த விவகாரம் தற்போது 3-வது முறையாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin