திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரியில் புத்தகத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.
கல்லூரி கலையரங்கில் நடைபெறும் இந்த கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வி. பொன்னுராஜ் தலைமை தாங்கினார். கல்விச் சங்க பொருளாளர் தளவாய் ராமசாமி கண்காட்சியைத் தொடக்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் பாரதி புத்தகாலயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், கிழக்கு பதிப்பகம், ஹிக்கின் பாதம்ஸ், தமிழ்நாடு புக் ஹவுஸ், யாதுமாகி பதிப்பகம், விகடன் பதிப்பகம் ஆகிய வெளியீட்டாளர்களின் ஏராளமான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியில் இடம்பெற்றுள்ள சிற்றிதழ்கள் குறித்து பேராசிரியர் திருநீலகண்டன் அறிமுக உரையாற்றினார்.
இந்த கண்காட்சி வெள்ளிக்கிழமை வரை கல்லூரி வேலைநேரங்களில் நடைபெறும். பொதுமக்களும் கண்காட்சியைப் பார்வையிடலாம். முன்னதாக, கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் கருப்பையா வரவேற்றார். நூலகர் நீலகண்டன் நன்றி கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக