வியாழன், 24 செப்டம்பர், 2009

பி.எஸ்.என்.எல். புதிய டெலிபோன் டைரக்டரி இன்று முதல் விநியோகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். சார்பில் புதிய டெலிபோன் டைரக்டரி வியாழக்கிழமை (செப். 24) முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

இது தொடர்பாக மாவட்ட பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு பொதுமேலாளர் என்.ஆர். நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். தரைவழி, வில்போன் வாடிக்கையாளர்களுக்கான புதிய டெலிபோன் டைரக்டரி 24.9.2009 முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

அந்தந்த தொலைபேசி நிலையத்தை சேர்ந்த வாடிக்கையாளர்கள் அந்தந்த தொலைபேசி நிலையங்களில் பணம் செலுத்திய 7.8.2009 அல்லது 7.9.2009 பில்லை காண்பித்து,

டைரக்டரியை பெற்றுக் கொள்ளலாம்.

துண்டிக்கப்பட்ட தரைவழி மற்றும் வில்போன் இணைப்புகளுக்கு அதன் துண்டிக்கப்பட்ட மாத கட்டணங்கள் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படுவதுடன், நிலுவைத் தொகையினை ஆறுமாத கால தவணைகளில் செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.

எனவே, வாடிக்கையாளர்கள் சேவை மையம் மற்றும் மேளா நடைபெறும் இடங்களில் அதற்கான விண்ணப்பத்தை கொடுத்து மறுபடியும் தங்களது இணைப்பை பொற்றுக்கொள்ளலாம்.

புதிய தரைவழி மற்றும் வில் இணைப்புகளுக்கு இப்போது அமைப்புக் கட்டணம் ரூ. 500 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

புதிய தரைவழி மற்றும் வில் இணைப்புகள் வேண்டுவோர் ரூ. 100 மட்டும் செலுத்தி புதிய இணைப்புகளை பெற்றுக் கொள்ளலாம்.

மீதமுள்ள வைப்புத் தொகையை நான்கு தவணைகளில் செலுத்தலாம். இந்த சலுகை 21.10.2009 வரை நீடிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin