தூத்துக்குடியில் இஸ்லாமிய சமூக சேவை மையம் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் தாஃவா மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அல்- இஸ்லாஹ் டிரஸ்ட் மற்றும் இஸ்லாமிய சமூக சேவை மையத்தின் தலைவர் எச்.எம். அஹமத் இக்பால் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் பொருளாளர் சுலைமான், துணைத் தலைவர் அண்ணல் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகமது அலி என்பவரின் தாய்க்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்காக ரூ. 10 ஆயிரம், ரஹ்மத்துல்லா என்பவரின் மகளுக்கு மருத்துவ உதவியாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, குவைத் ஐ.ஜி.சி. மற்றும் அல்-இஸ்லாஹ் டிரஸ்ட் மற்றும் இஸ்லாமிய சமூக சேவை மையம் இணைந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள அரிசி மற்றும் மசாலா பொருள்கள் சுமார் 200 பேருக்கு பித்ரா எனும் பெருநாள் உதவியாக வழங்கப்பட்டது.
இஸ்லாமிய சமூக சேவை மைய செயலர் சம்சுதீன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக