
ஜிஎஸ்எம் அடிப்படையிலான செல்போன் சேவையை அளித்து வரும் டாடா டோகோ மோ தற்போது பிளாக்பெர்ரி சேவையை அளிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இப்புதிய சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதற்காக ரிம் நிறுவனத்துடன் டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
டிஓ 299 மற்றும் டிஓ 899 என்ற இருவகை கட்டணத் திட்டத்தை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. உடனடி குறுஞ்செய்தி அனுப்புவது மற்றும் இணையதளத்தில் தகவல் சேவையைப் பெறுவதற்கு டிஓ 299 திட்டத்தைத் தேர்வு செய்யலாம்.
அதிக அளவில் இணையதளம் மற்றும் இ-மெயில் அனுப்புவோர்க்கு டிஓ 899 திட்டம் ஏற்றது. குரல்வழி தகவல் பரிமாற்றம் செய்ய விரும்புவோர் அதற்கு தனியாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக