வெள்ளி, 11 செப்டம்பர், 2009

அண்ணா நூற்றாண்டு-5 ரூபாய் சிறப்பு நாணயம் வெளியீடு


தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நடக்கும் அண்ணா நூற்றாண்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் அண்ணாவின் உருவ படம் பொறித்த ரூ. 5 நாணயத்தை பிரணாப் வெளியிடுகிறார்.

முன்னாள் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் வரும் 15ம் தேதி சென்னையில் தமிழக அரசு சார்பில் பிரமாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது.

விழாவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். நிதி அமைச்சர் அன்பழகன் முன்னிலையும், செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வரவேற்புரையும் நிகழ்த்துகின்றனர்.

இந்த விழாவுக்கு ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மற்றும் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சிறப்பு விருந்தினராக அழைக்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது.

மேலும், இந்த விழாவின் போது ராஜசேகர ரெட்டி யிடம் பேசி பாலாற்றுக்கு குறுக்கே அணை கட்டுவதை தடுக்க முயற்சி செய்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக ராஜசேகர ரெட்டி சமீபத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்ததால் அது நிறைவேறாமல் போனது.

இதையடுத்து தற்போது பிரணாப் முகர்ஜி மட்டும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அவர் விழாவில் அண்ணாவின் உருவ படம் பொறித்த ரூ. 5 நாணயத்தை வெளியிட இருக்கிறார்.

இதை தொடர்ந்து துணை முதல்வர் ஸ்டாலின் அண்ணாவின் இணையதளத்தை துவக்க வைத்து, அவரது நூல்களை வெளியிடுகிறார்.

இந்த விழாவில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் , நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம், மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin