புதன், 23 செப்டம்பர், 2009

அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத ஸ்ரீவை., தாலுகா : மக்கள் தினமும் அவதி

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலக வளாகத்தில் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் கழிப்பிட வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிபடுகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம் தாலுகாவின் தலைநகரமாக உள்ளதால் தாலுகாவின் நிர்வாக அலுவலகமான வட்டாட்சியர் அலுவலகம் ஸ்ரீவைகுண்டத்தில் பிரதானமாக இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் வளாகத்தில் தான் அரசு சார்நிலை கருவூலம் மற்றும் மாவட்ட துணை சிறை ஆகிய அலுவலகங்கள் இயங்கி வருகிறது.

தினந்தோறும் அலுவலக நாட்களில் சான்றிதழ் பட்டா மாறுதல், ரேசன்கார்டுகள், என பல்வேறு பணிகளுக்கு தாலுகா அலுவலகத்திற்கும் கைதிகளை பார்பதற்கு மற்றும் கருவூல பணிகளுக்கு என ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மேற்கண்ட அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் பெண்கள். இவர்கள் அவசரத்திற்கு கூட செல்லமுடியாமல் அவதிபடுகின்றனர்.

மேலும் இங்கு பொதுமக்களுக்கு என குடிநீர் வசதிகள் ஏதும் இல்லை. அடிப்படை வசதிகளை மக்களுக்கு செய்து கொடுக்கும் பொருப்புள்ள துறையான வருவாய்துறை மக்களின் அனைத்து விசயங்களுக்கும் இவர்களை பொறுப்பு ஆகும்

ஆனால் இந்த பொறுப்புள்ள அலுவலக வளாகத்தில் இதுபோன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனையே மேலும் இங்கு தினம்தோறும் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கென தனியாக செட்கள் ஏதும் இல்லை இதனால் வாகனங்களை இஸ்டத்துக்கு நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் சில நேரங்களில் தாசில்தார் வாகனம் வருவதற்கு தடையாக உள்ளது.

தனியாக அமைக்கபட்ட செட்டுகளில் புதிய பில்டிங் கட்டிவிட்டதால் வாகனங்கள் நிறுத்த முடியவி�ல்லை ஏதோ அக்காலத்தில் சில புண்ணிய வான்கள் மரங்களை நட்டுவைத்ததால் அந்த நிழலில் மக்கள் இளைப்பாறுகின்றனர்.

புராதானமான தாலுகாவாகிய ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தின் வளாகத்தில் இந்த அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட வேண்டும் மேலும் ஒவ்வொறு தாலுகா அலுவலகங்களிலும் மக்கள் சாசன அறிவிப்புகள் என்கிற, அறிவிப்பு பலகைகள் குறிப்பாக பலகை:

1.சாதிசான்று - 15 நாட்கள்

2. வருமான சான்று -15 நாட்கள்

3.இருப்பிடசான்று 30 நாட்கள்

4. இதரபள்ளி சான்றுகள் 15 நாட்கள்

5.வாரிசு சான்றிதழ் -15 நாட்கள்

6.பிறப்பு இறப்பு சான்றிதழ் - 15 நாட்கள்

7. பட்டாமாற்றம் - 15-30 நாட்கள் என்ற சாசன பலகையும் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்ற பலகையும், அறிவிப்பு: சாதிசான்று உட்பட ஏனைய சான்றுகளை பெற விடுமுறை இல்லாத நாட்களில் காலை 10 மணி முதல் 1மணி வரை மனுக்கள் பெறப்படும் மனுக்களை வாங்கிய தினத்தில் இருந்து மூன்று தினங்களில் சான்றுகள் வழங்கபடும்.

அறிவிப்பு: கோரிக்கை தொடர்பாக வரும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை வட்டாட்சியரிடமோ தலைமை இடத்து துணைவட்டாட்சியரிடமோ நேரில் தெரிவிக்க வேண்டும் ஏஜெண்டுகள் மூலம் தெரிவிக்க கூடாது கோரிக்கை தொடர்பாக ஏஜெண்டுகள் வந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பலகையும்

தகவல்மையம் : பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை இங்கு கொடுத்து தகவல் தெரிந்து கொள்ளலாம் மனுக்களுக்கு ஒப்புதல் ரசீது பெற்று கொள்ளவும் என்கிற தகவல்பலகைகள் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது. இதுபோன்ற மக்கள் சாசன அறிவிப்புகள் ஏதும் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தின் வளாகத்தில் வைக்கபடவில்லை. அடிப்படை வசதிகளும் இல்லை, அறிவிப்பு பலகையும் இல்லை இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.

மேற்கண்ட தகவல் சாசன பலகையும் அடிப்படை வசதிகளும் போர்கால நடவடிக்கையில் ஏற்படுத்த படவேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கை.

ஆபத்து, அவசர காலங்களில் பொது மக்களை பாதுகாக்கவும், மீட்கவும், பராமரிக்கவும் போர்கால நடவடிக்கை எடுத்து பாதுகாக்கும் வருவாய்துறை தேர்தல் என்றால் பலநாட்கள் கண்தூங்காமல் பணிபுரியும் வருவாய்துறை, நலப்பணிகளான இலவச திட்டங்கள் நிவாரணபணிகள் என்றால் வீடு, மனைவி, குழந்தைகள் என்று அனைத்தையும் மறந்து களத்தில் மாவட்டத்தின் கலெக்டர் முதல் கடைசி பணியாளர் வரை கண்அயராமல் கடைமையாற்றும் வருவாய்துறையின் அலுவலகம் இவ்வாறு அடிப்படை வசதிகளின்றி கிடப்பது உண்மையில் வருத்தத்திற்குறியது ஆகும்.

உடனடியாக மாவட்ட, தாலுகா நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து முட்செடிகளின் ஆக்கிரமிப்பில் இருக்கும் தாலுகா அலுவலகத்தை பொலிவுர செய்திட வேண்டும் இது பொதுமக்களின் கோரிக்கை புராதானமான தாலுகா அலுவலம் பொலிவு பெருமா? பார்ப்போம்.

தகவல் : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin