புதன், 23 செப்டம்பர், 2009

போலி ஆவணங்கள் மூலம் ரூ.6 லட்சம் கையாடல்: பஞ். தலைவருக்கு போலீஸ் வலை

ஸ்ரீவைகுண்டம் அருகே ஸ்ரீமூலக்கரை பஞ்சாயத்தில், போலி ஆவணங்கள் மூலம் ரூ.6 லட்சத்து 66 ஆயிரம் கையாடல் செய்த பஞ்சாயத்து தலைவர் உள்பட 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் யூனியனில், ஸ்ரீமூலக்கரை பஞ்சாயத்து உள்ளது. இந்த பஞ்சாயத்தின் தலைவராக பேச்சிமுத்து, உதவியாளராக நவநீத கிருஷ்ணன், பஞ்சாயத்து துணைத் தலைவராக ஜவஹர்ஷா ஆகியோர் உள்ளனர். இவர்கள், கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி முதல் 2009ம் ஆண்டு ஜுன் மாதம் 9ம் தேதி வரை பஞ்சாயத்தில் உள்ள நிதியை போலி ஆவணங்கள் தயார் செய்து பணத்தை கையாடல் செய்துள்ளனர்.

குறிப்பாக, இதுவரை போலி ஆவணங்கள் தயார் செய்து, ரூ.6 லட்சத்து 66 ஆயிரத்து 335 கையாடல் செய்துள்ளனர். இந்த பணம் கையாடல் சம்பவம், யூனியன் வளர்ச்சி அதிகாரிகள் பஞ்சாயத்து கணக்குகளை சரிபார்த்த போது தெரிவந்தது. இதனையடுத்து, ஸ்ரீவைகுண்டம் யூனியன் பி.டி.ஓ., சோமசுந்தரம் போலீசில் புகார் செய்தார்.

இச்சம்பவம் குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பஞ்சாயத்து தலைவர் பேச்சிமுத்து, பஞ்சாயத்து துணை தலைவர் ஜவஹர்ஷா, உதவியாளர் நவநீத கிருஷ்ணன் ஆகியோரை தேடிவருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin