நவதிருப்பதி கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு நடைதிறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
புரட்டாசி சனிக்கிழமைகளில் நவதிருப்பதி கோயில்கள் காலையில் நடைதிறக்கப்பட்டு இரவு வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ கள்ளபிரான் கோயில், நத்தம் ஸ்ரீ விஜயாசனப்பெருமாள் கோயில், திருப்புளியங்குடி ஸ்ரீ காய்சினிவேந்தர் பெருமாள் கோயில், பெருங்குளம் ஸ்ரீ மாயக்கூத்தர் பெருமாள் கோயில், தென்திருப்பேரை ஸ்ரீ மகரநெடுங்குழைக்காதர் கோயில், திருக்கோளூர் ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் கோயில், இரட்டைத்திருப்பதி ஸ்ரீ அரவிந்தலோசனார் பெருமாள் கோயில், ஸ்ரீ தேவர்பிரான் பெருமாள் கோயில், ஆழ்வார்திருநகரி ஸ்ரீ ஆதிநாதர்பெருமாள் கோயில் உள்ளிட்ட நவதிருப்பதி கோயில்களில் புரட்டாசி
சனிக்கிழமைதோறும் (5 சனிக்கிழமைகள்) அதிகாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஷ்வரூபதரிசனம், திருமஞ்சனஅலங்காரம், தீபாராதனை நடைபெறும்.
இரவு 9 மணிவரை பக்தர்கள் வழிபாட்டுக்காக நடை திறந்திருக்கும். இந்த கோயில்களில் ரூ.2, ரூ.10 கட்டண தரிசனமும், தர்ம தரிசனமும் உண்டு.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி தங்கபாண்டியன், இராமசுப்பிரமணியன் மற்றும் அறங்காவலர்கள் செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக