ஸ்ரீவைகுண்டத்தில் சத்துணவு ஊழியர்களின் நடைபயணம் நடந்தது.ஸ்ரீவைகுண்டம் அரசு ஊழியர் சங்க அலு வலகம் முன்பு நடந்த விழாவிற்கு மாவட்ட சங்க தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் சீனித்தாய் முன்னிலை வகித்தார்.
மாநில சத்துணவு ஊழியர் சங்க செயலாளர் சங்கரவடிவு கோரிக்கைகள் பற்றி விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வெ ங்கடேசன் வாழ்த்தி பேசி நடை பயணத்தை தொடங்கி வைத்தார்.
விழாவில் சாலைப் ப ணியாளர் சங்க மாவ ட்ட துணைத் தலைவர் வேல்சாமி, அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் கணபதி ஆகியோர் பே சினர். நடைப்பயணம் ஸ்ரீவை.,யில் இருந்து புதுக்குடி, ஆழ்வார்திருநகரி, குரும்பூர் வழியாக ஆத்தூர் வரை சென்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக