தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகமானவர்கள் பாஸ்போர்ட் எடுத்து விட்டதால் பாஸ்போர்ட் எடுப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த ஆண்டில் 6 மாதத்தை விட நடப்பாண்டில் 500 எண்ணிக்கை குறைந்துள்ளது.
தற்போது பெரும்பாலானவர்கள் பாஸ்போர்ட் எடுப்பதால் இதனை விரைவாக வழங்குவதற்கு வேண்டிய நடவடிக்கையும், எளிதான முறையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பு திருச்சியில் தான் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் ஆபிசில் உள்ள பாஸ்போர்ட் பிரிவு மூலம் விண்ணப்பம் செய்யும் அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் எடுக்கும் முறை எளிதாக்கப்பட்டு விட்டதாலும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பாஸ்போர்ட் எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது ஆண்டுக்கு, ஆண்டு பாஸ்போர்ட் எடுப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2008ம் ஆண்டு மொத்தம் 4 ஆயிரத்து 597 பேர் பாஸ்போர்ட் எடுக்க விண்ணப்பித்தனர். 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 2 ஆயிரத்து 870 பேர் பாஸ்போர்ட் எடுக்க விண்ணப்பம் செய்தனர்.
அதே சமயம் கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 3 ஆயிரத்து 320 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 500 விண்ணப்பம் குறைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக