வியாழன், 3 செப்டம்பர், 2009

காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம்

காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலர் வாவு கே.எஸ்.நாஸர் தலைமை வகித்தார். நகர தொண்டரணி அமைப்பாளர் அப்துல் வாஹித் கிராஅத் ஓதி கூட்டத்தை தொடக்கி வைத்தார்.

நகரச் செயலர் பி.எம்.எஸ்.அமானுல்லாஹ் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.இப்ராகிம் மக்கீ கூட்டத்தின் நோக்கம் குரித்து விவரித்தார்.

மாவட்ட துணைச் செயலர்கள் எஸ்.டி.கமால். மன்னர் பாதுல் அஸ்ஹப், நகர துணைச் செயலர் எம்.எல்.ஷேக்னா லெப்பை மற்றும் ரியாத் காயிதே மில்லத் பேரவை துணைத் தலைவர் எம்.எம். காஜாநவாஸ் ஆகியோர் பேசினர்.

முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினரும், மணிச்சுடர் நாளிதழின் வெளியீட்டாளருமான ஏ.அப்துல் ஹக்கீம் மறைவிற்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மேலும், புனித ரமலான் நோன்பு காலத்தில் காயல்பட்டினத்தில் ஏழை, எளியவர்களுக்கு அரிசி வழங்க தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக வாவு. கே.எஸ் .நாஸர். எம்.எல். ஷேக்னா லெப்பை, ஏ.எல்.எஸ்.அபூசாலிஹ், எஸ்.கே.மஹ்முதுல் ஹஸன், எம்.ஏ.சி. சுஹைல் இப்ராஹிம் மற்றும் எம்.ஏ.சுஹைல் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

ஜெ.உமர் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin