நாளை திங்கட்கிழமை செப்டம்பர் 21ஆம் தேதி ரம்ஜான் திருநாளை முன்னிட்டு மக்கள் தொலைக்காட்சியில் அன்றைய நாள் முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறது.
இன்று காலை 8.30 மணியளவில், கடற்பூக்களும் சாய்வு நாற்காலியும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சியில், கடலோர கிராமத்தில் தன் எழுத்துப் பயணத்தைத் தொடங்கி சாகித்ய அகாதமி விருது வரைக்குமான தனது எழுத்துப் பயணம் குறித்து எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதரர்கள் தன் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளும் வாழ்த்துகள் நிகழ்ச்சி காலை 9 மணியளவில் நேரடி ஒளிபரப்பாகிறது.
ஹஜ் புனிதப் பயணம் போக விரும்புகிறவர்களுக்கு வழிகாட்டும் பயணம் போகலாம் நிகழ்ச்சி காலை 10.30 மணிக்கும், பகல் 12 மணிக்கு புதுக்கவிதை உலகின் முடிசூடா மன்னன் கவிக்கோ அப்துல் ரகுமானுடன் ஓர் சந்திப்பும் ஒளிபரப்பாகிறது.
விதவிதமாய் பிரியாணி சமைப்பதை செய்முறையோடு விளக்கும் நிகழ்ச்சி பிரியமுள்ள பிரியாணி. இந்த நிகழ்ச்சி பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `தமிழா ஆஸ்கர் தமிழா...' ஆஸ்கர் திரைப்பட விழாவில் 2 விருதுகளைப் பெற்ற ஏ.ஆர்.ரகுமானைப் பற்றியும், இசைக் குறுந்தகடு பற்றியும் அதன் பின்னணி பற்றியுமான பதிவு.
இரவு 8.30 மணிக்கு தி மெசேஜ் நபிகள் நாயகத்தைப் பற்றிய திரைப்படம் குறித்த ஒரு பார்வை ஒளிபரப்பாகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக