புதன், 9 செப்டம்பர், 2009

நெல்லையில் பீடி சுற்றும் பெண்களிடம் கலந்துரையாடிய ராகுல்


ராகு‌ல் கா‌ந்‌தி, ‌இ‌ன்று பி‌ற்பக‌லி‌ல் நாக‌ர்கோ‌வி‌‌லி‌ல் ‌நிக‌ழ்‌ச்‌சியை முடி‌த்து‌‌‌வி‌ட்டு ஹெ‌லிகா‌ப்ட‌ர் மூல‌ம் நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வந்து இறங்கினார்.

அ‌ங்கு அவருக்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், இளைஞர் காங்கிரசார் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவர், பாளை நூற்றாண்டு மண்டபத்தில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பீடி சுற்றும் பெண்களிடமும், மாணவிகளிடமும் கலந்துரையாடினார். இதனையடுத்து பாளை சாரால் டக்கர் பள்ளியில், தூத்துக்குடி, நெல்லை நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த இளைஞர் காங்கிரசாரை சந்தித்தார்.

ராகுல்காந்தியின் வருகையொட்டி, நெல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அவரது தந்தை ராஜீவைப் போலவே இவரும் குழந்தைகளுக்கு கைகொடுத்தும், தனக்கு அளித்த பொன்னாடைகளை முதியவர்கள், பொதுமக்களுக்கு வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin