ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

ஸ்ரீவைகுண்டம் கல்லூரியில் நிறுவனர் தின விழா

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் கலைக் கல்லூரியில் கல்லூரி நிறுவனர் தின விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார்.

பத்மநாபமங்கலம் ஊராட்சித் தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். பேராசிரியர் சுப்பிரமணியன் வரவேற்றார். பேராசிரியர் போஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் சகாதேவன் உரையாற்றினார். கல்லூரி நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர் செங்கு தலைமையில், கல்லூரி முதல்வர் சங்கரநாராயணன் மற்றும் பேராசிரியர்கள் மரக்கன்றுகள் நட்டனர்.

பேராசிரியர் செல்வராஜ் நன்றி கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin