வெள்ளி, 11 செப்டம்பர், 2009

ஸ்ரீவைகுண்டத்தில் ரேஷன் கடைகளில் பறக்கும்படை குழு ஆய்வு

தூத்துக்குடி மாவட்டதிலுள்ள ரேஷன் கடைகளில் பறக்கும்படை குழு ஆய்வு செய்தது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டாரங்களிலுள்ள 41 ரேஷன் கடைகளில் இணைப்பதிவாளர் தலைமையில் பறக்கும் படைகுழு ஆய்வு மேற்கொண்டதில் அரிசி, சீனி, கோதுமை, மண்ணென்ணெய், சிறப்பு பொதுவிநியோகத்திட்ட பொருட்களான துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, சமையல் எண்ணெய், கோதுமை மாவு, ரவை, மைதா, மற்றும் 50 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களின் இருப்புகள் குறைவு ஏற்படுத்தியது, போலி பில் மூலம் விற்பனை செய்தது மற்றும் நிர்ணயித்த அளவினைக் காட்டிலும் கூடுதலாக விநியோகம் செய்தது ஆகியவற்றின் மூலம் மேற்கண்ட பொருட்கள் முறைகேடான வகையில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் முறைகேடுகள் புரிந்த 41 விற்பனையாளர்களிடமிருந்து ரூ.37 ஆயிரத்து 741.30 அபராத தொகை வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ரூ.7 ஆயிரத்து 442.60க்கு முறைகேடுகள் புரிந்த அக்காநாயக்கன்பட்டி நியாயவிலைக்கடை விற்பனையாளர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை தூத்துக்குடி கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin