இடையில் எங்கும் நிற்காமல் செல்லும் சென்னை-டெல்லி புயல்வேக ரெயில் (டோரண்டோ ரெயில்) போக்குவரத்தை வரும் 14-ஆம் தேதியன்று சென்னையில் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைக்கிறார்.
சென்னை போன்ற பெருநகரங்களுக்கு இடையே இடையில் எங்கும் நிற்காமல் செல்லும் புயல்வேக ரெயில்கள் (டோரண்டோ ரெயில்) இயக்கப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.அதன்படி, சென்னை-டெல்லி புயல்வேக ரயில் போக்குவரத்து தொடக்க விழா சென்டிரல் ரயில் நிலையத்தில் வரும் 14ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது.
புதிய ரயிலை மம்தா பானர்ஜி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதில், ரயில்வே இணை அமைச்சர்கள், ரயில்வே உயர் அதிகாரிகள், மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.சென்னை-டெல்லி புயல்வேக ரயில், ராஜதானி ரயிலைப் போல அதே வேகத்தில் செல்லும். சென்னையில் இருந்து டெல்லிக்கு 28 மணி நேரத்தில் போய்ச் சேரும். சென்னையில் இருந்து டெல்லி செல்லும் மற்ற ரெயில்கள் 34 மணி நேரத்தில் டெல்லி சென்றடைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக