வியாழன், 10 செப்டம்பர், 2009

பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகம்


பிளாஸ்டிக்கால் ஆன 10 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள காகிதத்தால் ஆன நோட்டுகளை விட 4 மடங்கு அதிக காலம் உழைக்கக் கூடியது பிளாஸ்டிக் நோட்டுகள்.

பாலிமரால் ஆன நோட்டுகளில் கள்ள நோட்டுகளை அச்சிடுவது மிகவும் கடினம். எனவே பாதுகாப்புத் தன்மை மற்றும் நீண்ட காலம் உழைக்கக் கூடியது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டிருப்பதால் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை படிப்படியாக புழக்கத்தில் கொண்டு வர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டமாக 100 கோடி எண்ணிக்கையில் 10 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதற்கென சர்வதேச அளவிலான டெண்டரை ரிசர்வ் வங்கி கோரியுள்ளது.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை முதலில் அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியாதான். தற்போது நியூஸிலாந்து, பப்புவா நியூ கினியா, ருமேனியா, பெர்முடா, புருனே, வியத்நாம் உள்ளிட்ட நாடுகளில் பிளாஸ்டிக் கரன்சிகள்தான் புழக்கத்தில் உள்ளன. தற்போது இந்தியாவும் இந்த நடைமுறையைப் பின்பற்ற உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin