செவ்வாய், 8 செப்டம்பர், 2009

குற்றால அருவிகளில் கரை புரண்டு ஓடும் வெள்ளம் :சிற‌ப்பு ப‌ட‌ங்க‌ள்


குற்றாலத்தில் பெய்து வரும் கனமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனா‌ல் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு‌ள்ளது.

நெல்லை மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக நேற்று காலையில் இருந்து மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது

கடந்த இரண்டு நாட்களாக மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. எனவே அந்த 2 அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு காவ‌ல்துறை‌யினர் தடை விதித்தனர்.

பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகள் குளித்தனர். மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளம் குறைந்ததும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப் படுவார்கள் என்று காவ‌ல்துறை‌யின‌ர்.

மெயின் அருவியில் சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் குளிக்க‌ த‌டை விதிக்க‌ப் ப‌ட்டிருந்த‌தால் வெறிச்சோடி காண‌ப்ப‌ட்ட‌து. குர‌ங்குக‌ள் அங்கும், இங்கும் தாவி விளையாடிக் கொண்டிருந்த‌ன‌. சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் அருவியில் குளித்துக் கொண்டிருக்கும் போது அவ‌ர்க‌ளின் பையை பிடுங்குவ‌து, உண‌வுப் பொருட்க‌ளை த‌ட்டிப் ப‌றிப்ப‌து என‌ ப‌டு பிஷியாக‌ இருக்கும் குர‌ங்குக‌ள் சோக‌மாக‌வே காண‌ப்ப‌ட்ட‌ன‌..

நன்றி : அலெக்ஸ்,தென்காசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin