திங்கள், 10 ஆகஸ்ட், 2009

இனி செல்போனிலும் "HD" தொழில்நுட்பம்!


நாளுக்கு நாள் பெருகிவரும் மொபைல் போன் பயன்பாட்டை அடுத்து அதை தயாரித்து தரும் நிறுவனங்களுக்கிடையில் பலத்த போட்டி நிலவுகிறது.

இதனால் தாங்கள் தயாரிக்கும் போன்களின் புதிய புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி பயனாளர்களை கவர வேண்டிய கட்டாயத்துக்கு தயாரிப்பு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

அந்த வகையில் அண்மையில் தென்கொரிய நாட்டை சார்ந்த சாம்சங் நிறுவனம் தண்ணீரிலிருந்து பாதுகாக்கும் வகையில் ஒரு மொபைல் போனை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது.

அதே போல் சூரிய ஒளியில் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை புகுத்தி ஒரு போனையும் அறிமுகப்படுத்தியது.அதே போல் இப்போது இருக்கும் TFT-LCD திரையின் அடுத்த கட்டமாக உள்ள AMOLED என்ற தொழில்நுட்பத்தை புகுத்தி Samsung Jet என்ற போனை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது.

இப்படி புதிய புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் தென்கொரிய நிறுவனங்கள் தான் முதலிடத்தில் உள்ளன.

இப்போது தென்கொரிய நாட்டை சாந்த மற்றொரு நிறுவனமான எல்.ஜி நிறுவனம் மொபைல் திரையில் மிக உயர்ரக தொழில்நுட்பமாக முதல் முறையாக HD (HighDefinition) தொழில்நுட்பத்தை புகுத்தி "Chocolate BL40" என்ற பெயரில் ஒரு போனை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

கிட்டதட்ட எல்.சி.டி டிவிக்களில் பயன்படுத்தப்படும் இந்த HD தொழில்நுட்பம் முதமுறையாக மொபைல் போனில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் நாம் நமது மொபைல் போனில் எல்.சி.டி டிவியில் காட்சிகளை பார்ப்பது போன்ற ஒரு புதிய அனுபவத்தை பெறலாம்.

இன்னும் இந்திய சந்தையில் வராத இந்த போனின் விலை 38000/- என்ற குறியீட்டு விலைக்கு விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin