ஸ்ரீவைகுண்டத்தில் சார்பு நீதி மன்றம் அமைக்க பரிந்துரை செய்யுமாறு தமிழக துணை முதல்வரிடம் வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் சங்கச் செயலர் பெருமாள்பிரபு, வழக்கறிஞர்கள் வி. மனோகரன், அருண் பாண்டியன், குணசேகரன், சீனிவாசன் உள்ளிட்டோர் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலினை புதன்கிழமை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:
ஸ்ரீவைகுண்டத்தில் சார்பு நீதி மன்றம் அமைக்க சென்னை உயர்நீதி மன்றம் பலமுறை பரிந்துரை செய்தும் காலதாமதம் ஏற்பட்டுவருகிறது.
எனவே தாங்கள் ஸ்ரீவைகுண்டத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து உயர்நீதி மன்றத்திற்கு பரிந்துரை செய்யவேண்டும்.
மேலும் ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முன்சீப் நீதிமன்ற வளாகத்திற்கு மாற்றப்பட்டதால் அந்தக் கட்டடம் சார்பு நீதிமன்றம் செயல்பட போதுமானதாகும்.
முன்சீப் நீதிமன்ற வளாகத்தில் 1.5 ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. எனவே வரும் காலங்களில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் இதே வளாகத்திற்குள் செயல்பட தேவையான கட்டடங்கள் கட்ட வசதி உள்ளது.
இத்தனை வசதிகள் இருந்தும் சார்பு நீதிமன்றம் அமைப்பதில் காலதாமதம் இருந்து வருகிறது.
எனவே துணை முதல்வராகிய தாங்கள் உடனே நிதி ஒதுக்கீடு செய்து சார்பு நீதி மன்றம் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக