சென்னையில் பன்றிக் காய்ச்சல் நோய் குறித்து மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக 4 இடங்களில் சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு, நோய் அறிகுறிகள் இருப்பவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்க சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
வேளச்சேரியில் நேற்று முன்தினம் சஞ்சய் என்ற சிறுவன் பல்வேறு நோய்கள் தாக்கப்பட்டு, உடல்நலம் குன்றிய நிலையில் சில உறுப்புகள்
செயலிழந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பன்றிக் காய்ச்சல் நோயின் அறிகுறி இருப்பதாக அறிந்து, தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டு உயிரிழந்தார்.
பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பவர்களை கண்டறிந்து, மாநகராட்சி மருத்துவர்களால் மருத்துவப் பரிசோதனைகள் செய்ய சிறப்பு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
மருத்துவப் பரிசோதனையில், பன்றிக் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. பன்றிக்
காய்ச்சல் நோய் உள்ளவர்கள் தொடர்ந்து 5 நாட்கள் மாத்திரைகள் சாப்பிட்டால் அந்நோயினை குணப்படுத்த முடியும்.
மாநகராட்சி சார்பில் 4 இடங்களில் 30 மருத்துவர்கள், 60 மருத்துவப் பணியாளர்கள் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டு
வருகிறது. தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் புதிய வார்டு ஏற்படுத்தப்பட்டு, அதில் 58 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும்
வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் இருப்பவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை வழங்கவும் சென்னை மாநகராட்சி
சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக