திங்கள், 10 ஆகஸ்ட், 2009

குற்றாலத்தில் 50ஆயிரம் கொள்ளை: திருடனைக் காட்டிக் கொடுத்த நவீன செல்போன்

குற்றாலத்தில் கான்ட்ராக்டர் ஒருவரின் காரிலிருந்து பணம், நகை மற்றும் செல்போனை திருடிய வழக்கில், காணாமல் போன நவீன செல்போனால் துப்பு துலங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வல்லான் கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் போஸ் (வயது 40). பில்டிங் காண்ட்ரக்டரான இவர் கடந்த 5ம் தேதி தனது நண்பர்களுடன் காரில் குற்றாலம் சென்றுள்ளார். குற்றாலம் அருவியில் குளிப்பதற்காக தான் அணிந்திருந்த 5பவுன் செயின், ரூ.10ஆயிரம், செல்போன் ஆகியவை அடங்கிய பேக்கை காரில் வைத்துவிட்டு, காரை பூட்டிச் சென்றுள்ளார் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, கார் கண்ணாடி உடைக்கப்படாமேலயே, உள்ளிருந்த பேக் திருடபட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து குற்றாலம் போலீஸில் புகார் செய்தார். திருட்டு போன பொருட்களின் மதிப்பு சுமார் 50 ஆயிரம் இருக்கும் என தெரிகிறது. இது குறித்து குற்றாலம் இன்ஸ்பெக்டர் விசாரணை செய்து வருகிறார்.

தற்போது, இந்த வழக்கில் பதிய திருப்பமாக, போஸ் பயன்படுத்திய நவீன செல்போனால் துப்பு துலங்கியுள்ளது. காணமல் போன செல்போனில் மொபைல் டிராக்கர் வசதி இருந்ததால், செல்போனை திருடிய நபர் பழைய சிம்மை கழற்றி விட்டு, புதிய சிம் மாற்றும் போது பழைய சிம்மில் ஏற்கனவே பதிவு செய்திருந்த இரண்டு நம்பர்களுக்கு தகவல் செல்லும். இதனை வைத்து செல்போன் திருடிய நபரை கண்டு பிடித்து விடலாம்.

குற்றாலத்தில் பணம், நகை மற்றும் செல்போன் பறிகொடுத்த போஸின் மனைவி செல்போனுக்கு அதேபோல் ஒரு மெசேஜ் வந்தது. அதில் தொலைந்து போன செல்போனில் புதிய சிம் கார்டு பொறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த சிம் கார்டின் எண்ணும் அந்த எஸ்.எம்.எஸில் வந்திருந்தது.

திருடியவரை தேடிக்கொண்டிருந்த காவல்துறையினருக்கு அல்வா சாப்பிட்டது போல் இருந்தது. காவல்துறையினர் உனடியாக செல்போன் கம்பெனியை தொடர்பு கொண்டபோது, முக்கூடல், பாப்பாக்குடியைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் மீனாட்சி சுந்தரம் (48) என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக போலீசார் அவரை அழைத்து விசாரித்ததில், நகை, பணம், செல்போன் திருடியவர் அவர்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.50ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திரும்பக் கிடைக்க காரணமான நவீன வகை செல்போன்களால், இனி இதுபோல் செல்போன் திருடர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். இனி மொபைல் திருட்டு மட்டுமல்ல பல்வேறு குற்றங்களை கண்டுபிடிக்க இந்த வகை செல்போன்கள் உதவும் என்பதில் ஆச்சரியமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin