வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ரெய்டு: வீடுகளில் பயன்படுத்தப்பட்ட மின்மோட்டார்கள் பறிமுதல்


நெல்லையில் விதிமுறைகளை மீறி, வீடுகளில் குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட மின் மோட்டார்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டையில் இன்று காலை மாநகராட்சிபொறியாளர், செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று தீடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்பொழுது, பாளையங்கோட்டை கடிகார ஆசாரி தெரு, தேவகிருபை தெரு, லோடிகான் சாகிப் தெரு, சாக்கிய நாயனார் தெரு, ஆயிரத்தம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தபோது, விதிமுறைகளுக்கு புறம்பாக மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சிய 6 பேரின் வீட்டிலிருந்து மின் மோட்டார் களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களது வீட்டின் குடிநீர் இணைப்பையும் துண்டித்தனர்.

இதுபோன்ற திடீர் ஆய்வு நடத்தி மின் மோட்டார்களை பறிமுதல் செய்யும் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் வீடுகளிலும் திடீர் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

செல்வா, திருநெல்வேலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin