வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

பாளை.யில் கணினி கண்காட்சி துவக்கம்


பாளையங்கோட்டையில் கணினி கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி கணினி விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சார்பில், 2-ம் ஆண்டாக பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் கணினி கண்காட்சி "ஐ.டி. எக்ஸ்போ 2009' என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.

இக் கண்காட்சியை அந்த சங்கத்துடன் "எச்.பி., காம்பக்' நிறுவனங்களும் இணைந்து நடத்துகின்றன.

சனிக்கிழமை வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.

இதில் "எச்.பி., காம்பக், எச்.சி.எல்., ஏசர், டெல், சாம்சங்' உள்ளிட்ட 9

நிறுவனங்கள் நேரடியாக தங்கள் அரங்குகளை அமைத்துள்ளன.

இம் மாவட்டத்தைச் சேர்ந்த கணினி விநியோகஸ்தர்கள் 20 பேர் அரங்குகள் அமைத்துள்ளனர்.

கண்காட்சியில் மொத்தம் 36 அரங்குகள் அமைக்கப்படுள்ளன.

கணினி, அதன் உதிரி பாகங்கள், கணினி மென்பொருள், கணினி தொடர்புடைய பொருள்கள் இடம்பெற்றுள்ளன.

அனைத்துப் பொருள்களும் சலுகை விலையில் விற்கப்படுகின்றன.

கண்காட்சி தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். நுழைவுக் கட்டணம் கிடையாது.

இக் கண்காட்சியின் திறப்பு விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் இரா.தி. சபாபதிமமோகன், கண்காட்சியை திறந்துவைத்தார்.

திறப்பு விழாவுக்கு கணினி விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் என். ஆனந்த வரதராஜன் தலைமை வகித்தார்.

சங்கச் செயலர் எம். ஜேக்கப் துரைராஜ், பொருளாளர் என். பாலகிருஷ்ணன், ஆர். முத்தையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin