சனி, 1 ஆகஸ்ட், 2009

திருச்செந்தூர், தூத்துக்குடியை குளிர்வித்த திடீர் மழை


தூத்துக்குடி, திருச்செந்தூரில் இன்று பிற்பகல் பெய்த மழையால் கடந்த சில நாட்களாக கடுமையான நிலவி வந்த வெப்பம் தணிந்தது குளிர்ச்சி நிலவியது.

கடந்த வாரம் நிகழ்ந்த சூரிய கிரகணத்தைத் தொடர்ந்து, திருச்செந்தூர் பகுதியில் அக்னி நட்சத்திரம் போல கடுமையான வெயில் அடித்துவந்தது. இந்நிலையில், இன்று, காலையிலிருந்து வெயிலின் தாக்கம் மிக அதிக அளவில் இருந்தது. நண்பகல் 12.30 மணிக்கு வெயிலின் தாக்கம் சிறிது குறைந்தது. பின்னர், திடீரென கருமேகங்கள் சூழந்தன.

இதைத் தொடர்ந்து குளிந்த காற்று வீசியது, அதன் பின்னர் பிற்பகல் ஒரு மணி முதல் லேசான தூறல் மழை தொடங்கி, அரைமணி நேரத்திற்கு பிறகு மிதமான மழை பெய்தது. சுமார் 45 நிமிடம் வரை நீடித்த மழையினால், நகரின் முக்கிய வீதிகளில் தண்ணீர் தேங்கியது.

அதைத் தொடர்ந்து சுமார் 15 நிமிஷம் மீண்டும் வெயில் அடித்தது. அதன் பின்னர் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது, சுமார் அரை மணிநேரம் மழை பெய்தது. மழை நின்ற பின்னர் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பகுதியில் கடந்த சிலதினங்களாக நிலவிவந்த வெப்பமான சூழல் மாறி குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

கந்தன், சக்திமுருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin