செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவைகுண்டத்தில் விஜயகாந்த் பிரசாரம்

ஸ்ரீவைகுண்டத்தில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து சனிக்கிழமை இரவு விஜயகாந்த் பேசினார்.

ஸ்ரீவைகுண்டம் தேமுதிக வேட்பாளர் எம். செüந்திரபாண்டியனை ஆதரித்து அவர் பேசியதாவது:

திமுகவினர் தேமுதிகவுக்கு ஓட்டு போடாதீர்கள், அவர்கள் வெற்றிபெற்று ஆட்சிக்கா வரப்போகின்றனர் என்றெல்லாம் பேசுவர். மு.க. அழகிரி 5 ஆண்டுகளாக எங்கே போனார் என்றார் அவர்.

அவருடன், வேட்பாளர் எம். செüந்திரபாண்டியன், முன்னாள் எம்.பி.யும், மாநில துணைப் பொதுச்செயலருமான ஆஸ்டின், திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலர் கணேஷ்குமார் ஆதித்தன், ரவீந்திரன், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலர் கோமதி கணேசன், துணைச் செயலர் ஏ.வி. முருகேசன், வடக்கு மாவட்டச் செயலர் பொன்ராஜ், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலர் தசரதபாண்டியன், நகரச் செயலர் சின்னத்தம்பி உள்ளிட்டோர் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin