ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009
ஸ்ரீவைகுண்டத்தில் நெப்போலியன் பிரசாரம் செய்தார்
திமுகவுக்கு தேமுதிக போட்டியே அல்ல என மத்திய சமூக நீதித்துறை இணையமைச்சர் நடிகர் நெப்போலியன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.பி. சுடலையாண்டியை ஆதரித்து நெப்போலியன் பிரசாரம் செய்தார்.
அவர் தனது பிரசாரத்தை வல்லநாட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கினார்.
தொடர்ந்து மணக்கரை, ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி, ஆழ்வார்கற்குளம், தோழப்பன்பண்ணை, பத்மநாபமங்கலம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட இடங்களில் அவர் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 3 ஆண்டுகளில் தமிழக முதல்வர் கருணாநிதி பல சிறப்பான திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். இந்த திட்டங்களால் சிறுவர்கள், பெரியவர்கள், மாணவர்கள், முதியவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், முதியோர் என அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற்று வருகின்றனர்.
எனக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்து, அதன் மூலம் சமூகநீதித் துறை இணை அமைச்சர் பதவியையும் முதல்வர் வழங்கியுள்ளார்.
இந்த பதவியை கொண்டு தாழ்த்தப்பட்ட, பின்தங்கி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்து வருகிறேன்.
தேர்தலில் போட்டியிட பயந்து அ.தி.மு.க. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது குறை கூறி தேர்தலை புறக்கணித்துள்ளது. மக்களை சந்திக்காமல், மக்கள் குறைகளை கேட்காமல் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவே தேர்தலைக் கண்டு பயந்து ஓடியுள்ள நிலையில் தி.மு.க.வுக்கு தே.மு.தி.க. போட்டியே அல்ல என்றார் நெப்போலியன்.
பிரசாரத்தின் போது எஸ்.ஆர். ஜெயதுரை எம்.பி., திருநெல்வேலி மாவட்டச் செயலர் கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் சென்றனர்.
லேபிள்கள்:
அரசியல்,
ஸ்ரீவை இடைத்தேர்தல்,
ஸ்ரீவை செய்தி,
ஸ்ரீவைகுண்டம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக