ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சனிக்கிழமை மட்டும் அரசியல் கட்சியினர் மீது 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஸ்ரீவைகுண்டம், ஏரல், சாயர்புரம், ஆத்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இவ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்தபோது, அனுமதியின்றி பல இடங்களில் விளம்பரப் பலகைகள், கட்சிக் கொடிகள் கட்டியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேமுதிகவினர் மீது மட்டும் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியினர் மீது 2 வழக்குகளும், திமுகவினர் மீது 1 வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக