ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவைகுண்டத்தை வைகுண்டமாக்குவேன்-விஜயகாந்த்


தேமுதிகவுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தால், ஸ்ரீவைகுண்டம் சட்டசபைத் தொகுதியை பூலோக வைகுண்டமாக மாற்றுவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி தேமுதிக வேட்பாளர் சவுந்திர பாண்டியனை ஆதரித்து விஜயகாந்த் நேற்று 2வது நாள் பிரசாரம் மேற்கொண்டார்.

ஏரலில் நடந்த பிரசாரத்தின் போது அவர் பேசுகையில்,

இந்த பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாகும். இங்கு உள்ள குளங்களை தூர்வாரினாலே இந்த பகுதி செழிப்பானதாக மாறும். ஆனால் அந்த பணியை அரசு செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குளங்கள் தூர்வாரப்படும். இதனால் விவசாயம் வளர்ச்சி பெறும்.

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப குடும்பநிதி மாதம் ரூ.500 வழங்க வேண்டும் என்று கூறி இருந்தேன். அதை வழங்க வேண்டும். இந்த பகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்க லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து வினியோகம் செய்வோம்.

கலைஞர் 121 சாதனைகளை செய்ததாக கூறுகிறார். அதை அவர் சொல்லக்கூடாது. மக்கள் சொல்ல வேண்டும்.

இந்த அரசு செய்த சாதனை விலைவாசி உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வுதான். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல லட்சம் பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்ததையும், இலவச கலர் டி.வி. கொடுப்பதையும் கூறுகிறார்கள்.

கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு உதவித்தொகையாக ரூ.6ஆயிரம், திருமணத் தொகை வழங்குவது சாதனையாக கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஊனமுற்றவர்கள் அதிகமாக பிறக்கிறார்கள். அதிகமாக உள்ளனர். இது ஒரு சாதனை என்கிறாரா?.

நான், எனக்கு தைரியம் இருப்பதால் கூட்டணி இல்லாமல் நிற்கிறேன். எனவே தேமுதிக வேட்பாளர் சவுந்திரபாண்டியனுக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள். இந்த ஸ்ரீவைகுண்டம் தொகுதியை வைகுண்டமாக மாற்றிக் காட்டுகிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin