ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

போதையில் டிரைவிங்-2000 பேர் லைசென்ஸ் ரத்து


சென்னையில் போதையில் வாகனங்கள் ஓட்டிய 2,000 பேரின் லைசென்ஸ்களை ரத்து செய்யுமாறு போக்குவரத்துத்துறைக்கு மாநகர காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.

போக்குவரத்துப் பிரிவு போலீசாருக்கான இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்துப் பேசிய போலீஸ் கமிஷ்னர் ராஜந்திரன்,

குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவதால் தான் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த ஆண்டு 300 பேர் விபத்துக்களில் பலியாகியுள்ளனர்.

இந்த ஆண்டில் இதுவரை குடிபோதையில் வாகனங்கள் ஓட்டிய 6,701 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 2,000 பேரின் லைசென்ஸ்களை ரத்து செய்யுமாறு அரசுப் போக்குவரத்துறைக்கு பரிந்துரைத்திருக்கிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin