வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமான 276 வீடுகளைப் பெற 15,000 முஸ்லிம்கள் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.
விண்ணப்பங்களைப் பெற வியாழக்கிழமை காலை 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் திரண்டதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் வக்ஃப் வாரியம் அலுவலகம் அமைந்துள்ள ஜாபர் சிராங் தெரு மட்டுமல்லாது ராஜாஜி சாலையிலும் போக்குவரத்து சில மணி நேரங்கள் பாதிக்கப்பட்டது.
கூட்டத்தை கட்டுப்படுத்தவும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும் ஏராளமான போலீஸôர் வரவழைக்கப்பட்டனர்.
அச்சடிக்கப்பட்ட 15,000 விண்ணப்பங்களும் தீர்ந்து விட்டதால் விநியோகம் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகே அந்தப் பகுதி சகஜ நிலைக்கு திரும்பியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக