ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
சனி, 8 ஆகஸ்ட், 2009
துபாய் இந்திய துணைத்தூதரகத்தில் ரத்ததான முகாம்
துபாய் இந்திய துணைத்தூதரகத்தில் கடந்த புதன்கிழமை அல் வாஸல் மருத்துவமனையுடன் இணைந்து ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.
இந்த ரத்ததான முகாமில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி தலைமையில் ரத்ததானம் செய்தனர். இதுபோன்ற பொதுச்சேவைகளில் இந்தியர்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதனை நிரூபிக்கும் விதத்தில் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இம்முகாமை ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்புச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, துபாய் தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் சி. ஜெகநாதன் தலைமையிலான குழுவினர் மேற்பார்வை செய்தனர்.
இதன் மூலம் சேகரிக்கப்பட்ட ரத்தம் குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கும், அவசர கால அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக