செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

சென்னையில் 'திடீர்' நிலநடுக்கம்


சென்னை நகரில் பல இடங்களில் நேற்‌றிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

நள்ளிரவு 1.30 மணி அளவில் எழும்பூர், வேப்பேரி, தியாகராய‌ர் நகர், அண்ணாநகர், புரசைவாக்கம், புளியந்தோப்பு, பாலவாக்கம், மடிப்பாக்கம், திரு.வி.க.நகர் உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது 7 விநாடிகள் நீடித்தது.

சென்னை தலைமை செயலகத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கு நிலநடுக்கம் 45 விநாடிகள்வரை நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டபோது, பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. இதையடுத்து பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாயினர்.

ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களிலும் நேற்று நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்தமானில் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கமே, சென்னையில் நில அதிர்வுக்கு காரணம் என்று வானிலை ஆராய்ச்சி நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin