வெளிநாடு வாழ் காயல்பட்டினம் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சியையொட்டி, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஹாங்காங் தைக்கா உபைதுல்லஹ்வின் ஒருங்கிணைப்பில், ஐக்கிய அமீரக காயல் நலமன்றம் மற்றும் தி காயல் பர்ஸ்ட் டிரஸ்ட் ஆகிய அமைப்புகள் இந்நிகழ்ச்சியை எல்.கே. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடத்தின.
வெளிநாடு வாழ் எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு வண்ணம் தீட்டுதல், கதை சொல்லுதல், ஓவியம், கட்டுரை,
பேச்சு மற்றும் விநாடி-வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங், கனடா, மஸ்கட், சௌதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கும் காயல்பட்டினத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு ஐக்கிய அரபு அமீரக காயல் நலமன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ.புஹாரி தலைமை வகித்தார். காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் வாவு செய்யது அப்துற் ரஹ்மான், முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்புச் செயலர் காயல் மகபூப், மாநில பொதுச் செயலர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் முத்துப்பேட்டை எம்.அப்துற் ரஹ்மான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார்.
தி காயல் பர்ஸ்ட் டிரஸ்ட் அமைப்பின் அறங்காவலர் எம்.ஏ.இப்ராஹிம் நன்றி கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக