இஸ்லாமிய முறைப்படி பள்ளிவாசல்களில் பதிவு செய்யப்படும் திருமண பதிவை அரசு ஏற்க வேண்டும் என்று உலமாக்கள், ஜமாத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆழ்வார்குறிச்சியில் நடைபெற்ற அம்பாசமுத்திரம் வட்டார உலமாக்கள், ஜமாத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிற தீர்மானங்கள்:
பாபர் மசூதி தொடர்பாக லிபரான் கமிஷன் அளித்துள்ள அறிக்கையின்படி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓரின சேர்க்கையை அரசு அங்கீகாரம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு ஜமாத்துல் உலமா சபைத் தலைவர் கே.என். முகம்மது மகபூப் தலைமை வகித்தார். உலமா சபையின் செயலர் எம். ஷேக்மீரான், பொருளாளர் எம்.எச். பக்ரூதீன்அலி, கல்லிடைக்குறிச்சி பி. ஷேக்மன்சூர், வீரை கவிஞர் எம்.ஏ. ரகுமான், அம்பை தாவூத் சாகிபு, எம். பீர்முகம்மது ஆலிம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக