ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009
துபாயில் நடனம் மற்றும் பேஷன் ஷோ இறுதிப் போட்டி
துபாயில் நடனம் மற்றும் பேஷன் ஷோ இறுதிப் போட்டி ஓயசிஸ் சென்டரில் நடைபெற்றது.
நடனத்தில் தங்களது திறனை வெளிப்படுத்திய ஸ்ரியா முதல் இடத்தையும், அனுஜா இரண்டாம் இடத்தையும், பெய்த் மூன்றாம் இடத்தையும், பள்ளிகளுக்கு இடையேயான நடனப்போட்டியில் பரிசுகளைப் பெற்றனர்.
பேஷன் போட்டியில் பிரெஸ்டன் கல்வி நிறுவனத்தின் சமா அலி முதலிடத்தையும், மதிஹா நூரின் இரண்டாம் இடத்தையும், வெல்லாங்காங் கல்வி நிறுவனத்தில் சையது கமர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
அப்பா மகன் பேன்ஸி டிரஸ் போட்டியில் வெங்கடேஷ் சேவுகன் மற்றும் மெய்யப்பன் வெங்கடேஷ் ஜோடி சிறப்புப் பரிசையும், அம்மா மகள் இணைந்த நடனப் போட்டியில் சோனால் மற்றும் அன்மால் ஜோடி சிறப்பிடத்தைப் பெற்றனர்.
இப்போட்டிகளில் பங்கேற்ற அதிக் வயதுடையவர் 53 வயதானவர். குறைந்த வயதுடையவர் மூன்று வயது ஆன சிறுவன்.
இந்திய சுதந்திரனத்தையொட்டியும் சிறப்புப் பாடலுக்கு நடனத்தை சாத் மற்றும் ரமீஷ் சபீர் கான் நடத்தினார்.
இப்போட்டிகளுக்கு அஃப்ஸன் சமீ, தீபா, ஆர்த்தி, ஆதில், சரோஜ் கான், சுஹைனா கான், சுரேஷ் நக்பால் உள்ளிட்டோர் நடுவர்களாகப் பங்கேற்றனர்.
இப்போட்டி சிறப்புற நடைபெற சென்டர் பாய்ண்ட், ஜுல்பிகார் அலி பூட்டோ கல்வி நிறுவனம், ஹோம் சென்டர், பவேரியா, ரஹ்மா ஆயில், தீபக் டெக்ஸ்டைல்ஸ், டிரீம் மேனேஜ்மெண்ட் கன்சல்டன்சி, நுட்ரோ, லமா டூர்ஸ், சபில், ரேடியோ ஸ்பைஸ், கல்ஃப் டெக் ணிகல், பிரைம் விஷன் ஸ்டுடியோ உள்ளிட்டவை ஆதரவளித்தன.
இந்நிகழ்வினை டிரீம் அட்வர்டைஸிங் நிறுவனம் ஒருங்கிணைத்து நடத்தியது. இதில் பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக