செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

10‌ஆ‌யிர‌‌ம் பேருட‌ன் ‌தி.மு.க.‌வி‌ல் இணை‌ந்த அ‌‌னிதா ராதா‌கிரு‌ஷ்ண‌ன்


அ.இ.அ.‌தி.மு.க.‌வி‌ல் இரு‌ந்து ‌நீ‌க்க‌ப்ப‌ட்ட தூ‌த்து‌க்கு மா‌வ‌ட்ட செயல‌ர் அ‌னிதா ராதா‌கி‌ரு‌ஷ்ண‌ன், தனது ஆதரவாள‌ர்க‌ள் 10 ஆ‌யிர‌ம் பேருட‌ன் ‌தி.மு.க. தலைவரு‌ம், முதலமை‌ச்சருமான கருணா‌நி‌தி மு‌ன்‌னிலை‌யி‌ல் நே‌‌ற்று ‌தி.மு.க.வி‌ல் இணை‌ந்தா‌ர்.

தூத்துக்குடி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. செயலராகவும், திருச்செந்தூர் தொகுதி ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பினராகவு‌ம் இருந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார். தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க.வில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் 29ஆ‌ம் தேதி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே அனிதா ராதாகிருஷ்ணன் நீக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன், 30ஆ‌ம் தேதி முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து, தி.மு.க.வில் இணைய விருப்பம் தெரிவித்தார். மறுநாள் தனது ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

அனிதா ராதாகிருஷ்ணன் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதற்காக, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை வந்தார்.

திருச்செந்தூர் தொகுதியில் இருந்து 114 பேரு‌ந்துகள், 70 வேன்கள், 300 கார்கள், முத்துநகர் ‌விரைவு இரயிலில் 3 சிறப்பு பெட்டிகள் என 10 ஆயிரம் தொண்டர்கள் சென்னை வந்தனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் பிரமாண்டமாக நடந்த இந்த இணையும் விழாவிற்கு முதலமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கினார். அமைச்சர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார். துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைவரையும் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலர் பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணனின் சகோதரர்கள் சண்முகானந்தன், சிவானந்தன், நித்யாநந்தன், சுதாநந்தன், ஜெயாநந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி நகர்மன்ற எதிர்க்கட்சி தலைவர் என்.சுரேஷ்குமார், நாசரேத் பேரூராட்சி தலைவர் எஸ்.மாமல்லன், கானம் பேரூராட்சி தலைவர் செந்தமிழ் சேகர், அங்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜான் உள்பட மாவட்ட, ஒன்றிய, உள்ளாட்சி நிர்வாகிகளும் தி.மு.க.வில் இணைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin