செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

8 ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 31.2009

சென்னை ,ஆகஸ்ட் 12 : எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அரசு உதவித்தொகையைப் பெறுவதற்கு ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கம் புதன் கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உதவித் தொகையை பெறுவதற்கு மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்வு நவம்பர் 8 ம் தேதி நடைபெறுகிறது.


விண்ணப்பங்களை WWW.tn.gov.inldge மற்றும் WWW.pallikalvi.in ஆகிய இணையதளங்களில் இருந்தும் பதிவிறக்கம்(down load) செய்து கொள்ளலாம்.

தேர்வுக் கட்டணம் ரூ.50. இதை அரசு கருவூலகத்தில் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆகஸ்டு 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேசியத் திறனாய்வுத் தேர்வு விண்ணப்பங்களை தொடர்புடைய மண்டல அலுவலகத்திலும், தேசிய வருவாய்வழி தேர்வுக்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரிடமும் சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதிகள்: தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு கடந்த கல்வி ஆண்டில் (ஏழாம்) 7-ம் வகுப்புத் தேர்வில் 60 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்று, இப்போது 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித் தொகை தேர்வுக்கு, 2009-10ம் ஆண்டில் மாநில அரசு பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம். ஆனால் இந்த மாணவர்களின் பெற்றோரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ 1.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் , எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 7-ம் வகுப்பு தேர்வில் 50 சதவீத மதிப்பெண்ணும், மற்ற பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.


31-க்குள் விண்ணப்பிக்கவும்: இத்தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர், அரசுத் தேர்வுகள் தலைமை அலுவலகத்திலும் கிடைக்கும். மேலும், சென்னை, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்ட அலுவலகங்கள், கேந்திரிய வித்யாலயா மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றிலும் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin