ஸ்ரீவைகுண்டம் தொகுதி பாஜக வேட்பாளர் சந்தாண குமார் சென்ற பிரச்சார ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேட்பாளர் உட்பட இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் சந்தாணக்குமார், அக்கட்சியின் மாநில தலைவர் இல.கணேசனுடன் இன்று மாலை செய்தியாளர் கூட்டதில் கலந்து கொண்டார். பின்னர் பிராச்சரத்திற்கு சென்று கொண்டிருந்த போது, சாயர்புரம் அருகே சிறுபாடு என்ற இடத்தில், இவரது பிரச்சார ஜீப் முன்புறம் ஆடு ஒன்று குறுக்கிட்டுள்ளது.
இதனால் திடீர் பிரேக் போட்டத்தில் நிலைகுலைந்த அவரது பிரச்சார வாகனம் தலைகுப்பிற கவிழ்ந்தது. இதில் வேட்பாளர் சந்தாண குமாருக்கு காயம் ஏற்பட்டது. அவருடன் சென்ற தூத்துக்குடி மாநகராட்சி 50வது வார்டு கவுன்சிலர் பிரபு படுகாயம் அடைந்துள்ளார். தற்போது பிரபு தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். விபத்திற்கு பின்னர் பாஜக வேட்பாளர் சந்தாணக்குமார் வழக்கம்போல் தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக