திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை (ஆக. 21) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்புச் சந்தை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வே.ப. சுஜயசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இதில் தனியார் நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களின் பெயர், ஊதியம், வயதுவரம்பு, கல்வித் தகுதி போன்ற விவரங்களை ஒரு முகப்புக் கடிதத்தில் குறிப்பிட்டு வியாழக்கிழமைக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு சந்தை நடைபெறும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வேலையளிப்போர், தங்கள் நிறுவன காலிப் பணியிடங்களுக்குத் தேவையான தகுதியுள்ள நபரைத் தேர்ந்தெடுக்கலாம் என்றார் அவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக