எட்சர்வ் நிறுவனம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி எட்சர்வ் நிறுவனம் ஆளுமைத் திறன் பயிற்சி, வெப் அப்ளிகேஷன், விற்பனை மேலாண்மை பயிற்சி, ஆஃபீஸ் ஆட்டோமேஷன் உள்ளிட்ட பயிற்சிகளை இணையதளம் மூலமாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கவுள்ளது.
பல்கலைக்கழகத்தைச் சார்ந்த சுமார் 1,500 மாணவர்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ஆர்.டி.சபாபதி மோகன், எட்சர்வ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் எஸ்.கிரிதரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக