செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

அக்டோபர் 1ம் தேதி முதல் தட்கல் கட்டண குறைப்பு அமல்

ரயிலில் தட்கல் முன்பதிவுக்கான கட்டணக் குறைப்பு வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலாகிறது.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே நிதிநிலை அறிக்கையில், தட்கல் முன்பதிவுக்காக வசூலிக்கப்படும் கட்டணம் குறைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.இந்த கட்டணக் குறைப்பு அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, தூங்கும் வகுப்புக்கான தட்கல் கட்டணம் ரூ.150ல் இருந்து ரூ.100 ஆக குறைக்கப்படுகிறது. ஏ.சி. சேர் கார் வகுப்புக்கு இதுவரை ரூ.150 ஆக இருந்து வந்த தட்கல் கட்டணம் தற்போது ரூ.75 ஆக குறைக்கப்படுகிறது.மற்ற வகுப்பு ஏ.சி. பயணங்களுக்கு இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த ரூ.300 கட்டணம், ரூ.200 ஆக குறைகிறது.

உட்கார்ந்து பயணம் செய்யும் 2வது வகுப்பு பயணத்துக்கான தட்கல் கட்டணம் ரூ.15ல் இருந்து ரூ.10 ஆகிறது. ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin