
அமீரக தமிழ்க் கவிஞர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் அமைப்பான வானலை வளர்தமிழ் அமைப்பு. மாதந்தோறும் நடைபெற்று வரும் கவிதை நிகழ்வில் இம்மாதம் கோடையும் வாடையும் எனும் தலைப்பில் கவிதைகள் வாசிக்கப்பட இருக்கின்றன.
இந்நிகழ்ச்சி நாளை 10.07.2009 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு கராமா சிவ் ஸ்டார் பவன் உணவகத்தில் நடைபெற இருக்கிறது நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சிம்மபாரதி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் வாசிக்கப்படும் கவிதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு தமிழ்த்தேர் எனும் இதழ் வெளியிடப்படுகிறது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சமூக ஆர்வலர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
இந்நிகழ்வில் அமீரக தமிழ்க் கவிஞர்கள் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக