வெள்ளி, 10 ஜூலை, 2009

சென்னையில் போலீசாருக்கு பயிற்சி தரும் யுஎஸ் ராணுவம்


கடல் வழியாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவினால் அவர்களை சமாளிப்பது எப்படி என்பது தொடர்பாக சென்னை போலீஸ் அகாடமி மூலம் அனைத்து மாநில போலீசாருக்கும் அமெரிக்க ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி தீவிரவாதிகள் மும்பையில் கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்தியதை அடுத்து மத்திய அரசு சென்னை, மும்பை, கொல்கத்தாவில் என்எஸ்ஜி கிளைகளை திறந்தது.

இதை தொடர்ந்து சென்னையின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க அங்கு போலீஸ் அகாடமி ஒன்றும் துவக்கப்ப்டடுள்ளது. வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் சுமார் 129 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த அகாடமி, ஐபிஎஸ் பயிற்சிகள் அளிக்கப்படும் ஹைதராபாத் போலீஸ் அகாடமிக்கு இணையாக கட்டப்பட்டுள்ளது.

இந்த அகாடமியில் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரிகள், டிஎஸ்பிக்கள் உள்ளிட்டோருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகளின் கடல்வழி அச்சுறுத்தலை முறியடிப்பது தொடர்பாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் இங்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

இந்த பயிற்சிகளை வழங்குவதற்காக அமெரிக்க கப்பற்படை மற்று சிஐஏவில் பணியாற்றிய 10 அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர். அவர்கள் மாநில போலீஸ், கடலோர பாதுகாப்பு படை, துணை ராணுவத்தினருக்கு பயிற்சி கொடுத்து வருகின்றனர்.

சுமார் 30 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சியில் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த 30 போலீசாருக்கு பயிற்சி கொடுக்கப்படும் என தெரிகிறது.

இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த போலீஸ் அகாடமி, தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற அகாடமி கிடையாது. இங்கு அமெரிக்க ராணுவத்தினர் பயிற்சி அளிப்பது பெருமையாக இருக்கிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin